Corona : பிரபல சினிமா தயாரிப்பாளர் திருமணம்... கோவிலில் எளிமையாக நடந்தது .. வாழ்த்தும் பிரபலங்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜூவை தெரியாதவர்களே இருக்க முடியாது. பல வெற்றி படங்களை கொடுத்தவர். அவரது மனைவி அனிதா கடந்த 2017-ம் ஆண்டு காலமானார்.

தயாரிப்பு பணிகளில் அவருக்கு மனைவி அனிதா மிகவும் உறுதுணையாக இருந்தவர். தில் ராஜு 'Fidaa' பட வேலைகள் காரணமாக வெளிநாட்டில் இருந்த போது மனைவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது தலையில் இடியாக விழுந்தது. இந்நிலையில் மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் அவர், இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வலம் வந்தன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது டிவிட்டர் தளத்தில் இதுபற்றி கூறிய தில் ராஜு "கொரோனா காரணமாக எனது பணிகளில் கடினமான சூழ்நிலை நிலவுகிறது. இருந்தாலும் நம்பிக்கையுடன் எனது வாழ்க்கையை திரும்ப ஆரம்பிக்கிறேன்" என்று அறிவித்தார்.
தயாரிப்பாளர் தில் ராஜுவின் திருமணம் நிஸாம்பாத் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நேற்று (10.05.2020) மிக எளிமையாக நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கு கொண்டனர். இந்நிலையில் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Popular producer Dil Raju's wedding photos. pic.twitter.com/nYfGU1MqK4
— Behindwoods (@behindwoods) May 11, 2020