பிரபல தொலைக்காட்சி நடிகர் மாரடைப்பால் மரணம்... சாகும் வயதா இது?... துக்கத்தில் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் கொஞ்ச நாட்களாகவே பல துக்க நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதிலும் பல கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த துக்க செய்தி மக்களை தாக்கியுள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகர் சச்சின் குமார் மரணமைந்துள்ளார். மிகவும் இளம் வயதில் இந்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கஹானி கர் கர் கி, சச்சின் லஜ்ஜா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

இரவு பெற்றோரிடம் பேசிவிட்டு உறங்க சென்ற அவர், காலையில் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி கூறிய நடிகர் ராகேஷ் பால் "உங்கள் சிரித்த முகத்தை மறக்கவே முடியாது. இத்தனை சீக்கிரம் பிரிந்தது எதற்கு? உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.