சூர்யாவின் முடிவுக்கு பிரபல நடிகர் கமெண்ட் - ''தைரியமே புருஷலட்சணம், அதுவும்.....''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

Actor Parthiban comments to Suriya and Jyothika's Ponmagal Vandhal | சூர்யா, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் குறித்து நடிகர் பார்த்திபன் க

இந்நிலையில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் பிரைமில் வருகிற மே 29 ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்திருந்தார். அவருக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தைரியமே புருஷலக்ஷணம் - அதுவும் தைரியலஷ்மியின் புருஷ(ன்)ர் - எத்துனை வைராக்யமுடன்-அத்துணையின் காதல் கணவராக, கௌரவம் காப்பவராக,வைத்தக் காலை பின்வாங்கா வையக வீரராக ...Ozhukkam , Thelivu , Thairiyamudan  ‘பொன்மகள் வந்தாள்’ வெளியிடுகிறார் .Amazing& வாழ்த்துக்கள்! என்று தனக்கே உரிய ஸ்டைலில் தெரிவித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Entertainment sub editor