நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் அடர் தாடியுடன் இருக்கும் படியும், சிறுவனாக இருக்கும்படியும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு ஷேவ் செய்திருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் அவரது பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் சந்திரமௌலி தனது கமெண்ட்டில், ''உங்களுக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கிறான் என்று நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிரேம்ஜி ஓடி ஒளிந்து கொள்ளும் சிறுவனின் ஜிஃபை கமெண்ட் செய்துள்ளார்.
நடிகர் பிரேம்ஜி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பண்முகம் கொண்டவர். அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் 'மாநாடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க,இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
I think you have a secret son 😱 https://t.co/uigQzcSa25
— 𝘊𝘩𝘢𝘯𝘥𝘳𝘢𝘮𝘰𝘶𝘭𝘪.𝘗.𝘚 (@moulistic) May 14, 2020