தாய்மையடைந்த பிரபல சின்னத்திரை நடிகை... போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி.. வாழ்த்தும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். சராசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் பிரபலங்களும் வீட்டில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகை ஷிகா சிங் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் கரண் ஷா என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் தற்போது தாய்மை அடைந்து உள்ளார். இந்த நல்ல செய்தியைத் தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இவர் ஜீ தொலைக்காட்சியில் தமிழ் ரசிகர்களாலும் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட கும்கும் பாக்யா(kumkum bhagya) தொடரில் வில்லியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.