அனல் பறக்கும் தேர்தல் களம்: அமமுக-வில் கட்சியில் இணைந்த பிரபல நடன இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர், டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Dance Master Kala joined TTV Dhinakaran's AMMK Party

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயார் செய்வது, வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் என தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் இணைந்தார். தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளாக நடன இயக்குநராக இருந்த கலா மாஸ்டர், தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தற்போது அமமுக-வில் இணைந்தது குறித்து பேசிய கலா மாஸ்டர், தினகரனின் நேர்மையான பேச்சும், அவரது துணிச்சலான செயல்பாடுகளுமே தன்னை அமமுக-வில் இணைய தூண்டியதாக தெரிவித்தார்.

மேலும், கட்சித் தொடர்பாக எந்த பணியை கொடுத்தாலும், உயிரைக் கொடுத்து உழைக்கத் தயார் எனவும் உறுதியளித்துள்ளார். நான் 30 வருடங்களாக திரைத்துறையில் இருந்தவள். என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை திறம்படச் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.