'பாம்பே' படத்தில் ஹம்மா ஹம்மா பாடலில் நடனமாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. அதனைத் தொடர்ந்து 'காதலர் தினம்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 'காதலர் தினம்' பாடல்கள் இன்று வரை ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.
அதனைத் தொடர்ந்து அர்ஜூனுடன் 'கண்ணோடு காண்பதெல்லாம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் வருடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். வெறும் 30 சதவீதம் மட்டுமே பிழைக்க வாய்ப்பிருப்பதாக அப்போது மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் தன் மன உறுதியின் காரணமாக கேன்சர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து அவர் அவ்வப்போது நம்பிக்கைகுரிய பதிவுகளை எழுதி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பதிவில், 'உங்கள் உடம்பு சொல்வதை கேளுங்கள். அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முன்பே நோய் கண்டுபிடிக்கப்பட்டால் அது சிகிச்சைக்கு பெரிதும் உதவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Note to self 📝
P.S. For the rest of you, listen to your body and go for regular check ups, early detection helps! #WorldCancerDay pic.twitter.com/TTmqxU4Oxd
— Sonali Bendre Behl (@iamsonalibendre) February 4, 2020