பரபரப்பான அரசியல் பிரச்சாரத்துக்கு இடையே புதுப்பட டீசரை வெளியிட்ட அரசியல்வாதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படத்தின் டீசரை அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

TTV Dhinakaran releases director Ameer's Achchamillai Achchamillai teaser

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்.18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் தேர்தல் பரப்புரைகள், பிரச்சாரங்கள் நிறைவடையவுள்ளது.

தேர்தல் பணிகள் தலைக்கு மேல் இருக்கும் நிலையிலும், இயக்குநர் அமீர் நடித்துள்ள ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படத்தின் டீசரை அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முத்து கோபால் இயக்கத்தில் அமீர் நடித்துள்ள ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படத்தில் விவசாயிகள் பிரச்சனை, மணல் கொள்ளை, டாஸ்மாக் உள்ளிட்ட தமிழகத்தில் சில முக்கிய பிரச்சனைகளை கொண்டு அரசியல் சார்ந்த படமாக உருவாகியுள்ளது.