பிரபல இயக்குனருக்கு திருமணம்... பல் டாக்டரை மணக்கிறார்.... வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை பலரும் எளிமையாக நடத்தி வருகின்றனர்.

பிரபல இயக்குனருக்கு முடிவான திருமணம் Popular director to get married to a dental doctor

அந்த வகையில் புகழ்பெற்ற 'சாஹோ' படத்தின் இயக்குனர் சுஜித் ரெட்டி தற்போது திருமணம் செய்ய இருக்கிறார். 29 வயதாகும் இளம் இயக்குனர் சுஜித் ரெட்டி, பிரவல்லிகா என்ற பல் மருத்துவரை மணக்க இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தினர் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். வெறும் இரண்டு படங்களிலேயே உச்சம் தொட்ட இயக்குனர் சுஜித் ரெட்டி அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

பிரபல இயக்குனருக்கு முடிவான திருமணம் Popular director to get married to a dental doctor

People looking for online information on Engagement, Saaho, Sujeeth Reddy will find this news story useful.