லாக்டவுனில் 'முறுக்கு கடை' திறந்த பிரபல தொகுப்பாளினி... அவரே வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த நாட்களை கழித்து வந்தனர்.

லாக்டவுனில் முறுக்கு கடை திறந்த பிரபல தொகுப்பாளினி popular anchor to start snacks shop during corona lockdown

கிராமத்து வாழ்க்கையின் மன அமைதியும், சந்தோஷமும் அவரை மிகவும் ஈர்த்தது. அவ்வப்போது கிராமத்தினர் உடன் சேர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் அவரது பதிவுகளை ரசிகர்கள் மிகவும் விரும்பி வந்தனர்.

அந்த வகையில் அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். கிராமத்தில் இருக்கும் ஒரு அம்மாவுடன் சேர்ந்து  முறுக்கு கடை ஆரம்பித்துள்ளார். அவர் கையால் முறுக்கு சுடுகிறார். மேலும் கடைக்கு 'மணிமேகலை முறுக்கு கடை' என்று பெயர் வைத்துள்ளனர். பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லாக்டவுனில் முறுக்கு கடை திறந்த பிரபல தொகுப்பாளினி popular anchor to start snacks shop during corona lockdown

People looking for online information on Corona, Covid19, Lockdown, Manimegalai will find this news story useful.