Corona : தனியா மாட்டிகிட்டேன்.. கையில பணமே இல்லை...ஆஸ்திரேலியாவில் சிக்கிய நடிகையின் வேதனை பதிவு..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் சிலர் வெளிநாடுகளிலும், வெளி ஊர்களிலும் சிக்கி இருக்கின்றனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஹிந்தி நடிகையான சாந்தினி பகவானி தற்போது ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ளார்.

இவர் தனது சஞ்சீவினி 2 படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர். இந்நிலையில் ஒரு மாத வொர்க்க்ஷாப் காரணமாக ஆஸ்திரேலியா சென்ற அவர் தற்போது அங்கு சிக்கியுள்ளார். மேலும் தனியாக இருப்பதாகவும், முதலில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகம் பின் கையில் பணம் குறைந்த போது ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது "டிக்கெட்டுகளை புக் செய்ய சென்றபோது எல்லா விமானங்களும் நிறைவடைந்துவிட்டது, அதுவுமில்லாமல் இந்த நேரத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானது இல்லை என்பதை உணர்ந்தேன். அதனால் நான் இங்கேயே தங்கி விட்டேன். மேலும் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமாக உள்ளது. எல்லாமே எங்கே அதிக விலையில் உள்ளது. என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து சமாளித்து வருகிறேன் சில இந்திய பெண்கள் உடன் சேர்ந்து வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறேன். அதனால் எப்படியோ பொருளாதார ரீதியாக சமாளித்த வருகிறேன்" என்று பரிதாபமாக கூறியுள்ளார்.