Corona : கோடிகளில் நிதி கொடுத்த லாரன்ஸ்... பாராட்டி தள்ளிய பிரபல நடிகை.. "நீங்க மனுஷனே இல்லை"
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகுந்த இந்த கடினமான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் பல நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக நடிகர் லாரன்ஸ் பற்றிய செய்திகள் நேற்று அதிக அளவில் வெளிவந்தன பெப்சி சங்க தலைவர் ஆர் கே செல்வமணி கூறும்போது "25 லட்சத்தை கொடுத்துவிட்டு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நடிகரும் சொல்லி இருந்தார்" என்று கூறினார். இந்த செய்தியை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன்பே நடிகர் லாரன்ஸ் ஒரு அறிவிப்பு விட்டார். அதில் தான் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தின் சம்பளத்திலிருந்து மூன்று கோடியை கொரோனா நிவாரண நிதியாக வழங்க போவதாகவும் கூறியிருந்தார். இதனைப் பார்த்த பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கஸ்தூரி. இது பற்றி அவர் "நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை. நீங்க மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான்" என்று கூறியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை.
நீங்க மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான் .
Whopping 3CR pledged by @offl_Lawrence Raghava Lawrence. Too overwhelmed for words. 🙏🙏🙏 pic.twitter.com/gZTdgKSnfH
— Kasturi Shankar (@KasthuriShankar) April 9, 2020