நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சமீபத்தில் உங்களை மிகவும் ஈர்த்த நடிகை யார் ? என ரசிகர் கேட்ட கேள்விக்கு, ''ராஷ்மிகா தான் தனக்கு பிடித்த நடிகை'' என்று ஹரிஷ் கல்யாண் பதிலளித்தார்.

ஹரிஷ் கல்யாண் - விவேக் இணைந்து நடித்திருந்த 'தாராள பிரபு' திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ஹரிஷிற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்திருந்தார். தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி இந்த படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
இதனையடுத்து பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து ஹரிஷ் கல்யாண் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் ரீமேக்கான இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'ஒ மணப்பெண்ணெ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#RashmikaMandanna #AskHarishKalyan @iamRashmika https://t.co/VsAqMo4FdK
— Harish kalyan (@iamharishkalyan) April 8, 2020