பிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி... டெஸ்ட் பண்ண கூட காசு இல்ல... பிரபல நடிகரிடம் உதவி கோரிக்கை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருவது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.

கொரோனா டெஸ்ட் உதவி கேட்கும் நடிகை Popular actress pleads help from actor to check corona test

அந்த வகையில் சல்மான்கானுடன் 'Veergati' படத்தில் நடித்த நடிகை பூஜா தட்வால் தற்போது பணமில்லாமல் மிகவும் வாடி வருகிறார். மேலும் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் நிலையில் அவர் டெஸ்ட் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார் என்ற செய்தி வடநாட்டு ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது.

ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் "சல்மான்கான் பலமுறை எனக்கு உதவி செய்துள்ளார். திரும்ப திரும்ப அவரிடம் கேட்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், இந்த முறையும் அவர் எனக்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன். இருக்கும் பணத்தை வைத்து தினசரி வாழ்வாதாரத்தை சந்திக்கவே கஷ்டமா இருக்கு. தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் சல்மான்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா டெஸ்ட் உதவி கேட்கும் நடிகை Popular actress pleads help from actor to check corona test

People looking for online information on Corona, Pooja Dadwal, Salman Khan will find this news story useful.