பிரபல சீரியல் நடிகை புதிய அனுபவம்.! கொரோனா வைரஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடந்தது எப்படி.?
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல சீரியல் நடிகை கொரோனா வைரஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடத்தியது குறித்து பதிவிட்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. இத்தொடரின் இரண்டு சீசன்களிலும் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது நாச்சியார்புரம் தொடரில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் ராதாமோகன் இயக்கிய உப்பு கருவாடு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என தமிழக அரசு அனுமதியளித்தது. இதையடுத்து தனது நாச்சியார்புரம் சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரச்சிதா அதுகுறித்து பதிவிட்டுள்ளார். ''கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது. எல்லாம் சரி, ஆனால் மாஸ்க்குடன் எப்படி நடிக்கிறது.? ஆனால் முறையான பாதுகாப்புடன் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை எதிர்க்கொள்ள என்னை நானே வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். மாற்றத்திற்கு தயாராவோம் மக்களே. இதுவும் கடந்து போகும்'' என பதிவிட்டுள்ளார். மேலும் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Sherin Shringar | Ajith's Birthday Wishes, Checkout Who Has Wished Him! - Slideshow
- Sherin Shringar
- Losliya
- Losliya - Photos
- Losliya | Ultimate Pongal 2020 Photo Album - Here's how your favorite stars celebrated Pongal this year!!! - Slideshow
- Losliya | Bigg Boss 3 - Contestants list - Slideshow
- Madhumitha
- Madhumitha | Bigg Boss 3 - Contestants List - Slideshow
- Madhumitha - Photos
- Mugen Rao
- Mugen Rao | Stars with their Supermoms - Latest special photo album here! - Slideshow
- Mugen Rao | Ultimate Pongal 2020 Photo Album - Here's how your favorite stars celebrated Pongal this year!!! - Slideshow