பிரபல நடிகை வேதனை பதிவு... வீட்டில் முக்கிய நபர் இறப்பு... கடைசியா அது கூட பண்ண முடியலையே...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நாகினி சீரியலின் நடிகை சயாந்தனி தற்போது ஒரு உருக்கமான பதிவு இட்டுள்ளார். இவர் புகழ்பெற்ற ராமாயணம் தொடரிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் தனது பாட்டியின் இறப்பு குறித்து கூறியுள்ளார்.
அவர் "எனது குடும்பத்துக்காக நீங்கள் காட்டிய அன்பு விலைமதிப்பற்றது. ஒரு முறை என்னை அம்மை நோய் தாக்கிய போது, நீங்கள் என் அருகிலேயே அமர்ந்து கவனித்து கொண்டதை மறக்கவே மாட்டேன். இப்போது என் மனதில் இருக்கும் பெரிய குறையே, கடைசி நாட்களில் உங்களுடன் இருக்க முடியவில்லை. மார்ச் மாதத்திலாவது நான் அங்கு வந்துவிட்டிருந்தால் உங்களுடன் சில காலம் இருந்திருப்பேனே" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.