Corona : பிரபல நடிகையின் திருமணம் நின்று போனது... திருமண பணத்தை கொரோனா நிதியாக வழங்கினார்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். தன்னார்வலர்களும், பிரபலங்களும், சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் நடித்து வருபவர் நடிகை பூஜா பானர்ஜி. மேலும் Tujh Sang Preet Lagai Sajna,Comedy Nights Bachao, Jhalak Dikhhla Jaa போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் குனால் வெர்மா என்பவரை மணக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர் ஒரு பதிவு இட்டுள்ளார், அதில் "எங்கள் திருமணம் தள்ளி போயுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் இருவரும் ரெஜிஸ்டர் செய்து விட்டதால், இப்போதே நாங்கள் கணவன் மனைவி தான். எங்கள் வாழ்க்கையை இனிதே துவங்கி இருக்கிறோம். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டகளுக்காக துக்கத்தில் இருக்கிறோம். எனவே எங்கள் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்.