லாக்டவுனில் சிக்ஸ் பேக்கால் மிரளச் செய்த பிரபல ஹீரோ - வெளியான ஃபோட்டோஸ் - வெறித்தனம் !
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் காரணமாக மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்கள் வித்தியாசமான முயற்சிகள் மூலம் தங்களை மேம்படுத்தி வருகின்றனர்.

மேலும் திரைப்பட படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என்பதால் பிரபலங்கள் வித்தியாசமான டாஸ்க்குகள், சமையல் செய்வது, டிக்டாக் , டான்ஸ் வீடியோ என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பகிர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நடிகர் கிச்சா சுதீப்பின் ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிச்சா சுதீப் சிக்ஸ் பேக்குடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''நீங்கள் எனக்கு எப்பொழுதும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள் சார்'' என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கிச்சா, ''உங்களுக்கு இன்ஸ்பிரேசனாக இருப்பதற்கு பெரும் மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.
I'm glad I could be of some inspiration my friend @PavanWadeyar . Mch luv to u always. https://t.co/1EMa1goKJC
— Kichcha Sudeepa (@KicchaSudeep) May 6, 2020