விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் தளபதி 65 குறித்து Hint கொடுத்த பிரபலம் ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்'மாஸ்டர்' படத்துக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

'தளபதி 65' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 'துப்பாக்கி 2' என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அதில் முற்றிலும் உண்மையில்லை என்றும் 'தளபதி 65' முழுமையாக புதுக் கதை என்றும் எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சந்தோஷ் சிவன் 'துப்பாக்கி' பட ஸ்டில்ஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர அது டிரெண்டானது. ரசிகர்கள் பலர் 'துப்பாக்கி 2'விற்கு அவர் ஹிண்ட் கொடுத்துள்ளதாக யூகிக்கத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு விளக்கமளித்த சந்தோஷ் சிவன், ''நான் இந்த பட ஸ்டில்ஸை பகிர்ந்தது போலவே மற்ற படங்களின் ஸ்டில்ஸையும் பகிர்ந்திருந்தேன். இது ஹிண்ட் இல்லை'' என்று தெரிவித்தார்.
I did put those on insta with other film stills too .. it was no hint 🙏
— SantoshSivanASC. ISC (@santoshsivan) May 6, 2020