அதிர வைத்த பிரபல நடிகர்... தயாரிப்பாளர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்...!
முகப்பு > சினிமா செய்திகள்சினிமா துறையைப் பற்றி சிலரிடம் ஒரு கருத்து நிலவி வருகிறது. அதாவது நடிகைகளும், பெண்களும் சினிமா வாய்ப்புக்காக தகாத முறையில் கொடுமைப்படுத்தப் படுவதாக கருதுகின்றனர். அதை உண்மையாக்கும் வகையில் சமீபத்தில் மீ டூ (ME TOO) என்கிற ஹாஷ்டேக் வைரலாக பரவியது. அதில் நடிகைகளும் பெண்களும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாக பேசி வந்தனர். அதையெல்லாம் தாண்டி நடிகர் ஒருவர் கூறியிருக்கும் கருத்து தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா ஹிந்தியில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். அவரது விக்கி டோனர், அந்தாதுன், ஆர்டிகள் 15 போன்ற படங்கள் சக்கை போடு போட்டன. மேலும் பல விருதுகளை பெற்ற அவர், தேசிய விருதும் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதாவது தான் வாய்ப்புகள் தேடி வந்த போது தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், உடனே அவரை தடுத்து நிறுத்தி வெளியேறியதாகவும் கூறியுள்ளார். இப்படி நடிகர் ஒருவர் வெளிப்படையாக கூறுவது இதுவே முதல்முறை. இந்த செய்தி சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.