ஆஸ்திரேலியாவை கலக்கும் 'புட்ட பொம்மா'... பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்ட வீடியோ.. செம வைரல்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கோரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பல துறை சார்ந்த பிரபலங்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் ரசிகர்களுடன் உரையாடுவது தற்போது அதிகரித்து இருக்கிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது மனைவி மகளுடன் சேர்ந்து புகழ்பெற்ற தென்னிந்திய பாடலான பொம்மை பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கில் ரசிகர்களை குவித்து வருகிறது. இந்த பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் அமைத்து வெளியிட்டுள்ளனர். ஆனாலும் நாடுகளை கடந்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் செய்த இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. Tiktok-ல் ஒரு மணி நேரத்தில் 10 மில்லியனை பார்வைகளை கடந்தது.
அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெட்ஜ் இணைந்து ஆடிய Butta Bomma பாடல் நூறு மில்லியன் பார்வைகளை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அர்மான் மாலிக் குரலில் தமன் இசையில் வெளியான இந்த பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடல் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.