www.garudabazaar.com

ட்ரீட்.. நலன் குமாரசாமி - கார்த்தியின் அடுத்த படத்துல இணையும் பாலிவுட் நடிகை.. வெளியான தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இணையும் புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Gayathri Bharadwaj roped as a female lead in Karthi 26

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகம் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

அதிலும் அவருக்கு 2022 ஆம் ஆண்டு, திரை பயணத்தில் சிறந்த வருடமாகவும் இது அமைந்திருந்து. முத்தையா இயக்கத்தில் அவர் நடித்திருந்த 'விருமன்' திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் 1, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி,  குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வித்தியாசமான லுக்கில் கார்த்தி இருந்தது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

சூது கவ்வும் திரைப்படம் இயக்கி தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி கொண்டவர் இயக்குனர் நலன் குமாரசாமி. குறும்படங்கள் இயக்கி பெயர் பெற்ற நலன், இந்த படத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இதே போல, குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜியின் ஒரு பகுதியையும் நலன் இயக்கி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், தற்போது நடிகர் கார்த்தியின் 26-வது படத்தை நலன் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான காயத்ரி பரத்வாஜ் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தின்தோரா, டைகர் நாகேஸ்வர ராவ் மற்றும் இட்டு சி பாத் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படதின் படப்பிடிப்பு மார்ச் மாதம் பூஜையுடன் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Gayathri Bharadwaj roped as a female lead in Karthi 26

People looking for online information on Karthi, Karthi26, Nalan Kumarasamy will find this news story useful.