www.garudabazaar.com

“பிகில் அப்போ பேசினேன்.. Life-ல 1st time வேலை இல்ல..” - ‘லவ் டுடே’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

Archana Kalpathi throwback speech in Love Today viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “தென் கிழக்கு ஆசியாவை ஆண்ட சோழப்பேரரசு - தஞ்சையில் வருகிறது சோழர் அருங்காட்சியகம்” - நிதியமைச்சர்.!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் உருவாகி வெளியான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில், “இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் காதல் உறவு சிக்கல்களைப் பற்றி நகைச்சுவை கலந்து டிராமாவாக இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’ கவர்ந்த இப்படத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

Archana Kalpathi throwback speech in Love Today viral

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே லவ் டுடே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டு வரும் இந்நிலையில் இப்பட விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளர் பிகில் படம் குறித்து பேசியுள்ள விஷயம் வைரலாகியுள்ளது.

அதன்படி, அந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “இந்த மேடையை மிகவும் சிறப்பான மேடையாக கருதுகிறேன். இதற்கு முன்பு பிகில் ஆடியோ விழாவில் பேசியிருந்தேன்.

Archana Kalpathi throwback speech in Love Today viral

Images are subject to © copyright to their respective owners.

வாழ்க்கையில் ஒரு High கிடைக்கும். நான் ஹெப்பியாக இருந்தேன். அதன் பிறகு கொரோனா வந்தது. வேலையே இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் லவ் டுடே இந்த அளவுக்கு ஒரு High கொடுத்திருக்கிறது. வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி ஒன்று இருக்கும். அதன் பிறகு நிறைய தோல்விகளை பார்க்க வேண்டியதிருக்கும். அதிலிருந்து மீண்டு இன்னொரு High கிடைக்கும். அதுதான் லவ் டுடே” என்று அர்ச்சனா கல்பாத்தி பேசியுள்ளார்.  இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | Pandian Stores : விசேஷ வீட்ல வெச்சு அசிங்கப்படுத்திட்டீங்களே.! மூர்த்தியிடம் கோபத்தில் கத்திய ஜீவா..

தொடர்புடைய இணைப்புகள்

Archana Kalpathi throwback speech in Love Today viral

People looking for online information on Archana kalpathi, Bigil, Leo, Pradeep Ranganathan, Vijay will find this news story useful.