Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

BB Jodigal 2: "அமீர்ட்ட இந்த ஒரு விசயம் மட்டும்..!" - டிவி நிகழ்ச்சியில் போட்டு உடைத்த பாவனி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பாவனி மற்றும் அமீர்.

Pavani Opens up on Amir anger BB Jodigal 2

Also Read | EXCLUSIVE: "இன்னொரு பெரிய படம் பன்றேன்.." SECRET அப்டேட் கொடுத்த S.J. சூர்யா! வீடியோ

5வது சீசனில் ஒரு போட்டியாளருக்கு முதன் முதலில் ஆர்மி தொடங்கப்பட்டது என்றால், அதுதான் பாவனி. ஆம், பாவனி ஆர்மி என்கிற ஒன்று அந்த சமயத்தில் பரவலாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து பிரபல விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர், கலக்கலான டான்ஸூடன் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்தார்.

Pavani Opens up on Amir anger BB Jodigal 2

வந்தவர் சில நாட்களிலேயே பாவனியிடம் தனக்கு இருக்கும் க்ரஷ்ஷை அவ்வப்போது விளையாட்டாக வெளிப்படுத்தி வந்தார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் தற்போது பிபி ஜோடிகள் எனும் பிக்பாஸ் போட்டியாளர்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர்.

Pavani Opens up on Amir anger BB Jodigal 2

இதில் தான் இந்த நடனத்தம்பதியரின் கெமிஸ்ட்ரி, பலரையும் கவர்ந்தது. அதில் அவ்வப்போது அமீர் தனக்கு ஓகே சொல்வாரா பாவனி என்பதை நடனத்திலும் பாடலிலும் கேட்பது போலான காட்சிகளும் வசனங்களும் இடம் பெறும். அப்படி அண்மையில் நடந்த நடனத்தில் இருவரும் மணக்கோலத்தில் வர, இவர்கள் இருவருக்கும், மேளம் கொட்டி, தாலி கட்டி திருமணமே ஆன காட்சிகள் அரங்கேறின.

Pavani Opens up on Amir anger BB Jodigal 2

இந்த நடனத்துக்கு பிறகு பேசிய பாவனி,  “அமீரிடம் பிடிக்காத விஷயம், அவருக்கு கோபம் வந்தால் பறக்கும். நான்  தான் கோவப்பட்டு எல்லாத்தையும் தூக்கி வீசவேண்டும், ஆனால் இவர்தான் அப்படி செய்வார். ஆனால் அந்த கோபத்தை பல நேரங்களில் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகியும் விடுவார்” என்று பேசினார்.

Pavani Opens up on Amir anger BB Jodigal 2

இதனைத் தொடர்ந்து பேசிய அமீர், தன்னை பற்றி பாசிடிவாக எதுவும் சொல்வதற்கில்லையா?  என கேட்டதற்கு பாவனி, “அது நியாபகம் வந்தா சொல்றேன்” என்றவர், கொஞ்ச நேரம் கழித்து, “பார்ட்டி வேளைகளில் இவர் என் பின்னாலேயே வருவார், அது எனக்கு பிடிக்கும்” என கூறியதும் அமீர் எக்சைட் ஆகிவிட்டார்.

இந்த நடன இணையர்களின் க்யூட் ரியாக்‌ஷன்களும் சின்ன சண்டைகளும் எப்போதும் ரசிகர்களை கவர்ந்தவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | கார் விபத்தில் ஹாலிவுட் நடிகை மரணம்.! பிரியங்கா சோப்ரா உருக்கமான பதிவு.!

தொடர்புடைய இணைப்புகள்

Pavani Opens up on Amir anger BB Jodigal 2

People looking for online information on Amir, Amir Pavani dance, Amir Pavani Marriage, Bb jodigal 2, Bigg Boss Tamil, Pavani, Vijay tv will find this news story useful.