நானும் waiting தான்ப்பா... நிறைவேறுமா பார்த்திபனின் ஆசை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பார்த்திபன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

parthiban is waiting for selvaraghavan's ayirathil oruvan 2

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான முயற்சிகளால் தனி இடம் பிடித்தவர் பார்த்திபன். புதுமையான கதை, மாறுபட்ட திரைமொழி என ரசிகர்களை எப்போதும் ஆச்சர்யத்தில் இவர் ஆழ்த்தி வந்தார். அண்மையில் வெளியான ஒத்தசெருப்பு படத்தில், தனி ஒருவனாக படம் முழுக்க நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து ரசிகர் ஒருவரின் பதிவுக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கிறேன் என படம் பார்த்து ஒருவர் ட்விட்டரில் பதிய, அதை குறிப்பிட்ட பார்த்திபன், 'நானும்' என பதிவிட்டுள்ளார். இயக்குநர் செல்வராகனும் தனக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க ஆசை உண்டு என கூறியிருந்தார். பார்த்திபனின் இந்த ஆசை நிறைவேறுமா என பொருத்திருந்து பார்ப்போம்.

Entertainment sub editor