பிரபல பாடகர் யேசுதாஸின் சகோதரர் மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் தனது மதி மயக்கும் குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவில் அவர் குரல் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம்.

Popular Singer KJ Yesudas brother KJ Justin Passed away

இந்நிலையில் அவரது வீட்டில் மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. காரணம் 62 வயதாகும் அவரது சகோதரர் கேஜே ஜஸ்டின் கடந்த புதன்கிழமை நீரோடையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் தனது குடும்பத்தினருடன் வாடகை விட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜஸ்டினை காணவில்லை என அவரது வீட்டில் புகார் கொடுத்துள்ளனர்.  அதன் பிறகே அவர் இறந்தது தெரியவந்துள்ளது.  ஜஸ்டின் அவரது மகன் இறந்த துக்கம் காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாராம்.  மேலும் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை

Entertainment sub editor