Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி.. ரசிகர்களுடன் செல்ஃபி! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி.

Soori Visit Rameshwaram Ramanatha Swamy Temple

Also Read | PS1 PONNIYIN SELVAN: ஆதித்த கரிகாலனின் மிரட்டலான லுக்.. பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!

கடைசியாக இவர் நடிப்பில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் விருமன் படம் வெளியானது.‌ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தார்.

அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து வருகிறார்.

விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலிசாக நடிக்கிறார்.

Soori Visit Rameshwaram Ramanatha Swamy Temple

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.

Soori Visit Rameshwaram Ramanatha Swamy Temple

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.

விடுதலை படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Soori Visit Rameshwaram Ramanatha Swamy Temple

இச்சூழலில் நடிகர் சூரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் கோயிலுக்கு வெளியே ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்துள்ளார்.

Also Read | இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Soori Visit Rameshwaram Ramanatha Swamy Temple

People looking for online information on Rameshwaram Ramanatha Swamy Temple, Soori, Soori Visit Rameshwaram Ramanatha Swamy will find this news story useful.