Nenjuku Needhi

பா ரஞ்சித் தயாரிப்பில் ‘அட்டகத்தி ‘ தினேஷ் நடிக்கும் J பேபி… டீசர் எப்போது- லேட்டஸ்ட் Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்டக்கத்தி தினேஷ், ஊர்வசி நடிப்பில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘J பேபி ‘ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Pa Ranjith attakathi dinesh J BABY movie teaser release update

Also Read | ”சிரிக்க வைப்பதே கடமைனு… இப்ப அழ வச்சீட்டிங்க”… வடிவேல் பாலாஜிக்காக உருகிய CWC புகழ்

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்புகள்…

இயக்குனர் பா ரஞ்சித் தொடங்கியுள்ள நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முதல் படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுகளை இந்த படம் பெற்றது. அடுத்தடுத்து நீலம் தயாரிப்பில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்களை அடுத்து தற்போது ஐந்தாவது தயாரிப்பாக ‘J பேபி’என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுரேஷ் மாரி  இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர்.

Pa Ranjith attakathi dinesh J BABY movie teaser release update

கவனம் ஈர்த்த J பேபி…

நடிகர் தினேஷ் , மாறன், ஊர்வசி நடிப்பில்  உருவாகியிருக்கும் இப்படம். நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். லொள்ளு சபா தொடரில் நடித்து சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் மாறன் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதுபோலவே ஊர்வசி கதாபாத்திரமும் பேசப்படும் ஒன்றாக அமையும் என சொல்லப்படுகிறது.

Pa Ranjith attakathi dinesh J BABY movie teaser release update

டீசர் அப்டேட்…

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 8 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 21 ஆம் தேதி ‘J பேபி’ படத்தின் டீசர் வெளியாகிம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இணையத்தில் இப்போது பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

Pa Ranjith attakathi dinesh J BABY movie teaser release update

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith attakathi dinesh J BABY movie teaser release update

People looking for online information on Attakathi Dinesh, J baby movie, J BABY movie teaser release update, Pa Ranjith will find this news story useful.