பா. ரஞ்சித் இயக்கும் புதிய படம்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போ? எங்க ரிலீஸ்? முக்கிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது.

Pa Ranjith New Film FL will be released at Cannes Film Festival

கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேசவேண்டிய, காட்சிப்படுத்தவேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம்பிடித்து காட்டும் ஒரு நிறுவனமாக நீலம் புரொடக்சன்ஸ் இயக்குனர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது.

Pa Ranjith New Film FL will be released at Cannes Film Festival

பரியேறும்பெருமாள் படத்திலிருந்து துவங்கப்பட்ட இந்த பயணம் இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை, என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது. அடுத்து சேத்துமான், ஜெ.பேபி, பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது, என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.

Pa Ranjith New Film FL will be released at Cannes Film Festival

இதனைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தமிழ்சினிமாவைத்தாண்டி தனது பயணத்தை துவங்க தனது சிறகை இன்னும் விரித்து பறக்க  நீலம் ஸ்டுடியோஸ் துவங்கியிருக்கிறது.

Pa Ranjith New Film FL will be released at Cannes Film Festival

நீலம் ஸ்டுடியோ வோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் Golden Ratio Films   இணைந்து  முதல் தயாரிப்பாக  இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் எனும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் இயக்கப்படுகிறது. இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. இதில் பா.இரஞ்சித் கலந்துகொள்கிறார்

இந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடரை இயக்குநர் பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith New Film FL will be released at Cannes Film Festival

People looking for online information on பா. ரஞ்சித், Cannes, Cannes Film Festival, Khan, Pa. Ranjith will find this news story useful.