கமல் - பா. ரஞ்சித் இணையும் புதிய படம்.. 'விக்ரம்' பட விழாவில் கமல் சொன்ன புதிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.

Pa Ranjith Kamal Haasan talked about Madurai based New film

Also Read | 'விக்ரம்' படத்தில் சூர்யா.. பட விழா மேடையில் அறிவித்த கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ்! முழு தகவல்

இவ்விழாவில், இயக்குனர்கள் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் ப்ட குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தின் டிரெய்லர் & இசை வெளியிடப்பட்டது. டிரெய்லர் யூடியூப்பில் வெளியான உடன் செம ஹிட்டடித்தது.

Pa Ranjith Kamal Haasan talked about Madurai based New film

இவ்விழாவில் பேசிய பா.ரஞ்சித் & கமல்ஹாசன்,  தங்களது அடுத்த படங்களை உறுதி செய்தனர். பா. ரஞ்சித் , "மதுரையை மையமாக வைத்து கமலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும், விருமாண்டி தனக்கு பிடித்த படம் என்றும் அறிவித்தார். கோட் சூட் போட்டும் மதுரையில் படம் எடுக்கலாம்" என்றும் அறிவித்தார். கமல் பேசும் போது, "பா.ரஞ்சித் உங்கள் எதிர்பார்ப்புக்கு விதை போற்று சென்றிருக்கிறார் அதுவும் நடக்கத்தான் போகிறது". என கூறினார்.

Pa Ranjith Kamal Haasan talked about Madurai based New film

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Pa Ranjith Kamal Haasan talked about Madurai based New film

பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் நடிப்பில் சியான்61 என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.  இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு ஆகும்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Kamal Haasan talked about Madurai based New film

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Pa Ranjith, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.