RRR Others USA
www.garudabazaar.com

ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் ’பேபி’… செம்ம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸின் அடுத்த தயாரிப்பால J பேபி என்ற படம் உருவாகி வருகிறது.

Pa Ranjith Neelam J Baby movie dubbing works completed

அட்டகத்தி to சார்பட்டா பரம்பரை

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல  வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

நீலம் புரொடக்‌ஷன்ஸ்...

பா ரஞ்சித் தொடங்கிய நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் முதல் படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுகளை இந்த படம் பெற்றது. அடுத்தடுத்து நீலம் தயாரிப்பில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்களை அடுத்து தற்போது ஐந்தாவது தயாரிப்பாக ஜெ. பேபி வெளிவர உள்ளது. சுரேஷ் மாரி  இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர். நீலம் புரொடக்‌ஷன்ஸ் இதுவரை தயாரித்த அனைத்துப் படங்களையும் புதுமுக இயக்குனர்களே இயக்கியுள்ளனர்.

Pa Ranjith Neelam J Baby movie dubbing works completed

முக்கிய வேடத்தில் லொள்ளுசபா மாறன்….

நடிகர் தினேஷ் , மாறன், ஊர்வசி நடிப்பில்  உருவாகியிருக்கும் இப்படம். நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது. விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். லொள்ளு சபா தொடரில் நடித்து சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் மாறன் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

Pa Ranjith Neelam J Baby movie dubbing works completed

அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.,..

படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பேபி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பேபி படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சம்மந்தமாக அட்டகத்தி தினேஷ், மற்றும் மாறன் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட அது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Pa Ranjith Neelam J Baby movie dubbing works completed

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Neelam J Baby movie dubbing works completed

People looking for online information on Attakathi Dinesh, J Baby, Urvashi will find this news story useful.