அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ‘J பேபி’… அன்னையர் தினத்தன்று ஸ்பெஷல் சர்ப்ரைஸ்… வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்டக்கத்தி தினேஷ், ஊர்வசி நடிப்பில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘J பேபி ‘ திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

J baby movie mother day special surprise

Also Read | VTK முதல் சிங்கிள் ‘காலத்துக்கும் நீ வேணும்’… பாடியது இவரா?- சிம்பு fans-க்கு குஷியான தகவல்

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ்…

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல  வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

J பேபி…

பா ரஞ்சித் தொடங்கிய நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முதல் படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுகளை இந்த படம் பெற்றது. அடுத்தடுத்து நீலம் தயாரிப்பில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்களை அடுத்து தற்போது ஐந்தாவது தயாரிப்பாக ‘J பேபி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுரேஷ் மாரி  இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர்.

J baby movie mother day special surprise

கவனம் ஈர்த்த போஸ்டர்…

நடிகர் தினேஷ் , மாறன், ஊர்வசி நடிப்பில்  உருவாகியிருக்கும் இப்படம். நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். லொள்ளு சபா தொடரில் நடித்து சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் மாறன் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதுபோலவே ஊர்வசி கதாபாத்திரமும் பேசப்படும் ஒன்றாக அமையும் என சொல்லப்படுகிறது.

J baby movie mother day special surprise

அன்னையர் தின ஸ்பெஷல்…

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் மே 8 ஆம் தேதி அன்னையர் தினத்தன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். இந்த அறிவிப்பு இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ‘J பேபி’… அன்னையர் தினத்தன்று ஸ்பெஷல் சர்ப்ரைஸ்… வெளியான தகவல்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

J baby movie mother day special surprise

People looking for online information on பா ரஞ்சித், J பேபி, J baby movie, J baby movie Updates, Pa Ranjith will find this news story useful.