BREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா? போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

Actor Vikram Pa Ranjith Chiyaan61 movie titled as MAIDAANAM

Also Read | "இதுனால தான் கல்யாணம் நடக்கலயா?".. அப்படி என்ன நடந்துச்சு? கங்கனாவே சொன்ன தகவல்.

தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது. இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, சென்ற ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

Vikram Pa Ranjith Chiyaan61 movie titled as MAIDAANAM produced by studio green Gnanavelraja

கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம்  “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

Vikram Pa Ranjith Chiyaan61 movie titled as MAIDAANAM produced by studio green Gnanavelraja

இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் நடிப்பில் சியான்61 என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.  இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு ஆகும்.

Vikram Pa Ranjith Chiyaan61 movie titled as MAIDAANAM produced by studio green Gnanavelraja

விக்ரம் நடிப்பில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படம் தியேட்டரில் ரிலீசானது. தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.  இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா? போடு வெடிய வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vikram Pa Ranjith Chiyaan61 movie titled as MAIDAANAM

People looking for online information on Chiyaan61 movie, MAIDAANAM, Pa Ranjith, Studio green Gnanavelraja, Vikram will find this news story useful.