அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித்.. தெறிக்கவிடும் Photos.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், பிரபல தமிழ் இயக்குனர் கலந்து கொண்ட புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Pa Ranjith in Cannes film festival for first look release

Also Read | "அம்மாவ இருந்துட்டு இப்படி பண்ணலாமா.." ரசிகைக்கு 'நச்' விளக்கம் கொடுத்த நடிகை

75 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் நகரில் இன்று அமோகமாக தொடங்கி உள்ளது.

இந்திய சார்பில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

இன்று (17.05.2022) ஆரம்பமான இந்த திரைப்பட விழா, மே 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த விழாவில், தமிழ், மலையாளம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது.

இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் மாதவன், நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Pa Ranjith in Cannes film festival for first look release

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல்

மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் படம், இந்திய சார்பில் திரையிடப்படுகிறது. மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இயக்கி உள்ள 'லி மஸ்க்' என்னும் விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படமும், நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள, நான் லீனியர் திரைக்கதையில், சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

Pa Ranjith in Cannes film festival for first look release

இது போக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலரும், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பா. ரஞ்சித்

இந்நிலையில், அட்டகத்தி, கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் பா. ரஞ்சித், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அவர் ஐடி கார்டு மற்றும் முகக் கவசத்துடன் இருக்கும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

Pa Ranjith in Cannes film festival for first look release

பா. ரஞ்சித் அடுத்ததாக கோல்டன் ரேஷியோ பிலிம்ஸுடன் இணைந்து தயாரித்து, இயக்கவுள்ள 'வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith in Cannes film festival for first look release

People looking for online information on கேன்ஸ் திரைப்பட விழா, பா ரஞ்சித், Cannes Film Festival, Pa Ranjith will find this news story useful.