சென்சாரான ராகவா லாரண்ஸின் காஞ்சனா 3 : ரிசல்ட் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரண்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்களை திரையரங்கம் நோக்கி அழைத்து வந்தது.

Raghava Lawrence and Oviya's Kanchana 3 Censored U/A certified

அதன் அடுத்த பாகமாக வெளியான 'காஞ்சனா 2' வும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக 'காஞ்சனா 3' உருவாகிறது. இந்த படத்தில் ராகவா லாரண்ஸ் உடன் கோவை சரளா, வேதிகா, ஓவியா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

ராகவா லாரண்ஸின் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சன் டிவி இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

மேலும் இந்த படத்திலிருந்து நண்பனுக்கு கோயில கட்டு, காளி காளி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.