www.garudabazaar.com

"எனக்கு கார் ஓட்ட தெரியாது".. இயக்குனர் மித்ரன் கார்த்தியுடன் கார் ரைடு.. ஜாலியான வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியுடன் இயக்குனர் பி.எஸ். மித்ரன் கார் ரைடு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

Sardar Director P S Mithran Karthi Fortuner Car Ride

Also Read | உலகின் உயரமான கட்டிடத்தில் பிறந்தநாள் வாழ்த்து.. 4 வருடமாக மாஸ் காட்டும் ஷாருக்கான்!

நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Sardar Director P S Mithran Karthi Fortuner Car Ride

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் இரண்டாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதல் வாரத்தில் 380 திரைகளில் வெளியான இந்த படம், இரண்டாவது வாரத்தில் 500 திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Sardar Director P S Mithran Karthi Fortuner Car Ride

இச்சூழலில்  இயக்குனர் P.S.மித்ரனுக்கு   தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குனருக்கு வழங்கினார்.

பரிசாக பெற்ற காரில் இயக்குனர் மித்ரன் & கார்த்தி பயணம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. காரை நடிகர் கார்த்தி ஓட்டும் போது, "மித்ரன் வண்டி ஓட்டுற ஆள் மாதிரி தெரியலையே" என கூற, பதிலுக்கு இயக்குனர் மித்ரன், "கார் கதவை திறந்து உட்கார தான் தெரியும். அவ்வளவு தான் நமக்கு தெரியும்" என ஜாலியாக பதில் அளித்த காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Sardar Director P S Mithran Karthi Fortuner Car Ride

சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | Varisu : ரஞ்சிதமே.. விஜய் பாடும் 'வாரிசு' முதல் சிங்கிள்.. வெளியான GLIMPSE வீடியோ.!

"எனக்கு கார் ஓட்ட தெரியாது".. இயக்குனர் மித்ரன் கார்த்தியுடன் கார் ரைடு.. ஜாலியான வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sardar Director P S Mithran Karthi Fortuner Car Ride

People looking for online information on Fortuner Car, Karthi, P S Mithran, Sardar will find this news story useful.