" />
www.garudabazaar.com

சாமி..சாமி.. பாடலுக்கு GP முத்து போட்ட ஸ்டெப்.. Rashmika-க்கே Tough கொடுப்பாரு போலயே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புஷ்பா படத்தின் சாமி சாமி பாடலுக்கு GP முத்து நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

GP Muthu dances to Sami song from the Pushpa movie video

Also Read | "சனியன் எனக்குனே வருது".. மீண்டும் முட்டிய தனலட்சுமி - அசீம் .. பற்றிக்கொண்ட bigg boss வீடு.!

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடித்து வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் சாமி.. சாமி பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ராஷ்மிகா போலவே நடனமாடி ரசிகர்கள் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர்.

GP Muthu dances to Sami song from the Pushpa movie video

இந்நிலையில் சன்னி லியோன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. “ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், GP முத்து, அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

GP Muthu dances to Sami song from the Pushpa movie video

டிக்டாக் மூலமாக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் GP முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்றே சொல்ல வேண்டும். யூடியூப் பக்கத்திலும் வீடியோ போட்டுவரும் முத்து, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்  6-ல் பங்கேற்றார். பின்னர், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என கவலை தெரிவித்துவந்த முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவர் "ஓ மை கோஸ்ட்" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

GP Muthu dances to Sami song from the Pushpa movie video

இந்த நிகழ்ச்சியின்போது, GP முத்து மேடைக்கு வர, ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். அப்போது, புஷ்பா படத்தின் சாமி.. சாமி பாடலுக்கு அவர் நடனமாட அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அப்போது பேசிய முத்து, முன்னரே தான் இந்த பாடலுக்கு நடனமாடியிருப்பதாக தெரிவித்தார். இதனிடையே GP முத்துவின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read | Asal Kolar : “Vibe செட் ஆகுறவங்க கூடதான் நிவாஷினி பேசுவாங்க”.. சக போட்டியாளர்கள் குறித்து பேசிய அசல்.!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu dances to Sami song from the Pushpa movie video

People looking for online information on Bigg boss gp muthu, GP MUTHU, GP Muthu dance Pushpa Movie Song will find this news story useful.