'தெய்வமகள்' வாணி போஜன் எமோஷனல் - ''விண்ணைத் தாண்டி வருவாயா' பட வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டேன்
முகப்பு > சினிமா செய்திகள்அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'ஓ மை கடவுளே'. விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் இருவரும் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்க, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. லியோன் ஜேம்ஸ் இந்த படத்துக்கு இசையமைக்க, விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தெய்வமகள் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் கவனம் ஈர்த்த வாணி போஜன், இந்த படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படம் குறித்து Behindwwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''தெய்வமகள்' சீரியல் ஹிட் ஆனதுக்கு பிறகு எனக்கு நிறைய சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.
எங்க அம்மா கூட , தெய்வமகள் சீரியல் ஹிட். எதுக்கு சினிமாலாம். சீரியல் தொடர்ந்து பண்ணுனு சொன்னாங்க. கிங் ஃபிஷர்ல வேலை பார்த்துட்டு இருக்கப்போ எனக்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக ஆடிசன் கால் வந்தது. எனக்கும் நடிக்கணும்னு ஆசை இருந்தது. ஆனால் யாராவது எதாவது சொல்லுவாங்க, வேணாம் என்ற பயம் இருந்தது'' என்றார்.
'தெய்வமகள்' வாணி போஜன் எமோஷனல் - ''விண்ணைத் தாண்டி வருவாயா' பட வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டேன் வீடியோ