அடுத்த வாரம்தான் படம் ரிலீஸ்.. அதற்குள் இப்படியா..? பக்கா லவ்வர்ஸ் ட்ரீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசோக் செல்வன் நடிக்கும் ஓ மை கடவுளே படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.

ashok selvan ritika's oh my kadavule goes to telugu

அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஓ மை கடவுளே. ஆஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரித்திகா சிங், வானி போஜன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஓ மை கடவுளே திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.வி.பி சினிமாஸ் இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 14 அன்று ஓ மை கடவுளே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த வேளையில், அதற்கு முன்பே படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது பி.வி.பி சினிமாஸ் நிறுவனம்.

Entertainment sub editor