பெரிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணி போஜன் ! அடுத்த படத்தின் அசத்தும் அப்டேட்ஸ் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாணி போஜன் நடிக்கும் அடுத்த படம் புதிய அப்டேட்கள் தெரியவந்துள்ளன.

vani bhojan to pair atharva in her next film under debut director

சின்னத்திரையில் பிரபலமானவர் வாணி போஜன். தெய்வமகள் சீரியலில் சத்யா கேரக்டரில் நடித்து இவர் தமிழகம் முழுவதிலும் பிரபலமானார். இதையடுத்து தெலுங்கில் மீக்கு மாத்ரமே செப்பதா எனும் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது தமிழில் இவர் அசோக் செல்வன், ரித்திகா சிங்குடன் இணைந்து ஓ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வாணி போஜன் நடிக்கும் அடுத்த படம் பற்றி தெரியவந்துள்ளது. தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அதர்வாவுடன் இவர் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கிவிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாத இறுதியில் இருந்து லண்டனில் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Entertainment sub editor