வாணி போஜன் செம ஸ்பீட், 'ஓ மை கடவுளே'க்கு பிறகு பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த படம் Complete

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மை கடவுளே' திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vani Bhojan Completes her Portion in Aadhav Kannadasan's Film

இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து வாணி போஜன் அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் லண்டனில் துவங்கப்படவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் வாணி போஜன்,  ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள படத்தில் அவரது பணிகள் நிறைவடைந்துள்ளன. புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஆதவ் கண்ணதாசன் தயாரித்துள்ளார்.

Entertainment sub editor