பாலிவுட்டில் உருவாகி வரும் ‘லக்ஷ்மி பாம்’ படத்தின் பணிகளை மீண்டும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் தொடங்கவிருப்பது குறித்து நடிகை கியாரா அத்வானி பேசியுள்ளார்.

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘காஞ்சனா’ திரைப்படம் ஹிந்தியில் ‘லக்ஷ்மி பாம்’ என்ற தலைப்பில் ரீமேக்காகி வருகிறது.
இப்படத்தில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடித்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராகவா லாரன்ஸின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின், லக்ஷ்மி பாம் படக்குழுவினர் சமரசம் செய்து தற்போது மீண்டும் லக்ஷ்மி பாம் படத்தை லாரன்ஸ் இயக்கவிருக்கிறார்.
மீண்டும் ராகவா லாரன்ஸ் ‘லக்ஷ்மி பாம்’ படத்தை இயக்க ஒப்புக் கொண்டது குறித்து நடிகை கியாரா அத்வானி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘ராகவா லாரன்ஸ் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்தேன். அதேபோல் அவர் வந்துவிட்டார். இந்த படத்தை பற்றி அவரை தவிர வேறு யாரும் புரியாது. அவர் தான் இப்படத்தை இயக்க சரியானவர்’.
‘ஏனெனில் முதற்கட்ட ஷூட்டிங்கில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். சிறப்பனவர். நல்ல மனிதரும்கும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஏற்கனவே ‘காஞ்சனா’ படத்தை இயக்க்யிருக்கிறார். இது அவரது குழந்தை மாதிரி. அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என கூறியுள்ளார்.