உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்கி வரும் ஜூலை.14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், 22வது லீக் போட்டி லண்டன் மான்செஸ்டர் மைதனாத்தில் இன்று (ஜூன்.16) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலக கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மான்செஸ்டர், ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்கவும், இந்திய அணியை உற்சாகப்படுத்தவும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோர் லண்டன் ஓல்டு டிராப்போர்ட் மைதானத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இந்திய அணியை உற்சாகப்படுத்தும் அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வெற்றி நமதே! வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் அனுபவம்’ என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ திரைப்படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியானது. இதில் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நெல்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Vetri namadhe 🇮🇳
Lifetime experience #IndiaVsPakistan #INDvsPAK #CWC19 @Siva_Kartikeyan pic.twitter.com/SoDKnSVtP0
— Anirudh Ravichander (@anirudhofficial) June 16, 2019