"தோனியை வெறுக்கும் அளவுக்கு முட்டாள்கள் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்" சித்தார்த் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தோனியை பலரும் விமர்சித்து வரும் நிலையில் நடிகர், சித்தார்த் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளர்.

Actor Siddharth Tweet About MS Dhoni and Kedar Jadhav Trolled

இங்கிலாந்து, இந்திய அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.

நேற்றைய போட்டியில் தோனி மெதுவாக விளையாடியது தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். அதிக ரன்கள் தேவைப்படுகிறது என்று தெரிந்தும் தோனி 4, 6 என்று அடிக்காமல் சிங்கிளாக அடித்து சொதப்பிவிட்டார் என்று அவரை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணியில் 11 பேர் இருந்தும் அனைவரும் தோனியை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும், குறை கூறுவதும் சரியில்லை. இந்நிலையில் நடிகர், சித்தார்த் தோனிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளர்.

தோனியை வெறுக்கும் அளவுக்கு முட்டாள்கள் இருப்பது தெரிந்தால் நாம் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பது புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.