இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
![Simbu starring Mufti tamil remake film shoot begins today Simbu starring Mufti tamil remake film shoot begins today](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/simbu-starring-mufti-tamil-remake-film-shoot-begins-today-news-1.jpg)
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் வரும் ஜூன்.25ம் தேதி முதல் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நர்தன் இயக்குகிறார். இப்படத்தில் சிம்புவுடன் நடிகர் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவஸ்தவ், சாயா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இதில் சிவராஜ்குமார் நடித்த கேங்க்ஸ்டர் ரோலில் சிம்பு நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியதாகவும், இப்படத்திற்காக 25 நாட்கள் நடிகர் சிம்பு கால் ஷீட் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.