கொரோனா வைரஸ் பாதுகாப்பு முறை பற்றி கே.எஸ்.ரவிகுமார் படத்தில் வந்த வசனத்தை வைத்து உருவான மீம்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை வைத்து இவர் பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளார். குறிப்பாக படையப்பா, முத்து, தசாவதாரம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது இவர் இயக்கம் மட்டுமில்லாமல், படங்களிலும் ஆர்வமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதற்காக பாதுகாப்பு முறைகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஏற்ப கே.எஸ்.ரவிகுமார் படத்தில் வந்த காட்சியை வைத்து நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ் லைக்ஸை அள்ளி வருகிறது. நாட்டாமை படத்தில் விஜயகுமார் சொல்லும் 'இவன் கூட அன்னந்தண்ணி யாரும் பொழங்க கூடாது' எனும் வசனத்தை Social Distancing என்றும், படையப்பாவில் பல வருடம் ரூம்முக்குள்ளேயே இருக்கும் ரம்யா கிருஷ்ணன் self quarantine எனவும் சொல்லும் மீம்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
After Minsara Kanna - Parasite
This two films of KSR referenced for Corona pic.twitter.com/e7k4FAzp3l
— AG (@arunrp555) March 17, 2020