''கொரோனா படிச்சுப்பார்த்துட்டு திரும்பி போய்டும்'' - மீமிற்கு விஷ்ணு விஷால் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் அது சார்ந்த மீம்கள் வைரலாகி வருகிறது. பெரும்பாலான மீம்கள் திரைப்பட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக முண்டாசுப்பட்டி படத்தில் ஒரு காட்சியில், விஷ்ணு விஷாலும், காளி வெங்கட்டும் ஊருக்குள் நுழையும் போது எல்லோர் வீட்டு வாசலிலும் திரும்பிப்போ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். இது பற்றி காளி வெங்கட் விசாரிக்கும் போது, ''தீய சக்திகள் அதனைப் படிச்சு பார்த்து திரும்பிப் போய்டும்'' என்று ஊர் மக்கள் கூறுவார்கள்.
இதனையடிப்படையாகக் கொண்டு திரும்பிப் போ என்ற வாசகத்திற்கு பதிலாக Corona Go என்று எழுதியிருக்கும்படியும் அதற்கு காளி ''அது எண்ணங்க எல்லார் ஸ்டேட்டஸ்லயும் கொரோனோ கோ என்று போட்டுருக்கீங்க என்று கேட்க, அதற்கு அப்படி போட்டா, கொரோனா அத படிச்சுப் பார்த்துட்டு போய்டும்'' என்று அந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் இந்திய முழுவதும் இப்போ முண்டாசுப்பட்டி தான். இதுபற்றி இயக்குநர் ராம்குமார் மற்றும் காளி வெங்கட் பதில் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மீம் தற்போது நல்ல வைரலாகி வருகிறது.
#Mundaasupatti times all over INDIA right now@dir_ramkumar @kaaliactor
Comments plz.... pic.twitter.com/NpmkGODdVL
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 6, 2020