Video : கொரோனா வைரஸ் குறித்து ஜாக்கி சான் வெளியிட்ட வீடியோ - ''இது கஷ்டமான காலம்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனாவிற்கு முழுமையான தீர்வு எதுவும் காணப்படாததால் இது பெரும் சவாலாக விளங்குகிறது.

Jackie Chan shares a video about Corona Virus | கொரோனா வைரஸ் குறித்து ஜாக்கிசான் வெளியிட்ட வீடியோ

குறிப்பாக சீனா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டதாக இருக்கிறது. எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் வீடுகளில் இருப்பது மட்டுமே ஒரே தீர்வு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், ''அனைவருக்கும் இது மிக கஷ்டமான காலம். நாம் கொரோனா வைரஸ் என்ற ஒரே பிரச்சனையை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நாம் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும்.

நமது அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவேண்டும். ஒருவேளை நீங்கள் வெளியில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருங்கள். நமக்கு ஒளிமையமான எதிர்கொள்ளுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

VIDEO : கொரோனா வைரஸ் குறித்து ஜாக்கி சான் வெளியிட்ட வீடியோ - ''இது கஷ்டமான காலம்'' வீடியோ

Entertainment sub editor