சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமம் பெற்ற அஜித் பட தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பதாய் ஹோ’ திரைப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமத்தை தல அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.

Boney Kapoor buys the remake rights of the blockbuster Badhaai Ho

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான‘பதாய் ஹோ’ அமித் ஷர்மா இயக்கியிருந்தார். ஜங்கிலி பிக்சர்ஸ் மற்றும் குரோம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி, சர்வதேச அளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில், ‘தேவர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மாவை அறிமுகம் செய்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், அவரிடம் இருந்து ‘பதாய் ஹோ’ வெற்றிப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் படமாக்கும் உரிமத்தை கைப்பற்றியுள்ளார்.

இது தவிர, நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் சர்கார் நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகவிருக்கும் திரைப்படத்தையும் அமித்துடன் இணைந்து போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் புகழ்பெற்ற கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிம் என்பவ்ரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகவுள்ளது.

தற்போது தல அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக போனி கபூர் அறிமுகமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.