www.garudabazaar.com

நானி - நஸ்ரியா நடிப்பில் புதிய ரொமாண்டிக் காமெடி படம்.. வெளியான ஜாலி டீசர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'அடடே சுந்தரா' டீசர் வெளியீடு

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Teaser Dropped

Also Read | அடடே..! நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் இதுதான்!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான 'அன்டே சுந்தரனக்கி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணைந்து முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Teaser Dropped

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.  இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Teaser Dropped

இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது. இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.

இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் பிரத்யேக முத்திரை அவரது எழுத்திலும், இயக்கத்திலும் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் விவேக் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது. மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பு என்பதால் இந்தப்படத்தின் தரம் முதன்மையானதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Teaser Dropped

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரத்தியேக வசன உச்சரிப்பு, இப்படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது. அதே தருணத்தில் நடிகை நஸ்ரியா நசீம் உடனான அவரது கெமிஸ்ட்ரி, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. நானி மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நகைச்சுவை பகுதியை சிறப்பித்திருக்கிறார்கள். ரவிதேஜா கிரிஜாலா இப்படத்தை தொகுத்திருக்கிறார்.

அண்மையில் வெளியான டீஸர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானளாவிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

இந்தப்படம் தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும் ஜூன் 10ஆம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Teaser Dropped

நடிகர்கள்

நானி

நஸ்ரியா

பகத் ஃபாசில்

நதியா

ஹர்ஷவர்தன்

ராகுல் ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு

எழுத்து & இயக்கம். : விவேக் ஆத்ரேயா

தயாரிப்பாளர்கள்  : நவீன் யெர்னேனி & ரவிசங்கர். ஒய்.

தயாரிப்பு நிறுவனம்  : மைத்திரி மூவி மேக்கர்ஸ்

தலைமை நிர்வாக அதிகாரி  : செர்ரி

இசை  : விவேக் சாகர்

ஒளிப்பதிவு  : நிகேத்  பொம்மி

படத்தொகுப்பு  : ரவிதேஜா கிரிஜாலா

தயாரிப்பு வடிவமைப்பு  : லதா நாயுடு

விளம்பர வடிவமைப்பு  : அணில் & பானு

மக்கள் தொடர்பு  : யுவராஜ்

Also Read | BEAST அரபிக்குத்து பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடிய P V சிந்து! பூஜாக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..

நானி - நஸ்ரியா நடிப்பில் புதிய ரொமாண்டிக் காமெடி படம்.. வெளியான ஜாலி டீசர்! எப்படி இருக்கு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Teaser Dropped

People looking for online information on Ante Sundaraniki Movie, Ante Sundaraniki Movie Teaser, Nani, Nazriya nazim, Vivek Athreya will find this news story useful.